அமெரிக்க நாசா வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் உள்ளது.விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி, பல்வேறு ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
2022 ஆம் ஆண்டில், நாசா விண்வெளி வீரர் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி நிலையத்தில் செலவிட்டார். அப்போது, வாகன நிறுத்துமிடத்தில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில், மண் பயன்படுத்தாமல் தக்காளி செய்கையை தொடக்கினார். ரூபியோவின் தக்காளி தோட்டம் விண்வெளியில் முதல் தக்காளி தோட்டமாக கருதப்படுகிறது. தக்காளி காய்த்தபோது, அது விண்வெளியில் விளைந்த முதல் தக்காளி என்ற பெருமையையும் பெற்றது.
ரூபியோ அன்று இரண்டு பழுத்த தக்காளிகளைப் பறித்து, அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து சீல் வைத்திருந்தார் பின்னர் அவர் வேறு வேலையில் இருந்து திரும்பியபோது, ஆய்வகத்தில் இருந்து தக்காளி காணாமல் போனது.
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் காரணமாக அவை மிதந்து சென்று ஆய்வகத்தில் உள்ள பொருள்களின் குவியல்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்து, ரூபியோ அவற்றைத் தேடினார். ஆனால் அவை கிடைக்கவில்லை.
ஆனால், ரூபியோ அந்த இரண்டு தக்காளிகளையும் சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். எஎனினும் ரூபியோ அதை கடுமையாக மறுத்தார்.பின்னர் ரூபியோ பூமிக்குத் திரும்பினார்.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் இருந்த இரண்டு காய்ந்த தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு தற்போது விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ரூபியோ குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
Discussion about this post