க.பொ.த. சாதரணதரப் பரீட்சை மண்டபத்தில் கேள்விகளுக்கு விடைகள் கூறுவதாகக் கூறி, பாலியல் ரீதியான அத்துமீறலில் இடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம், நாச்சதுவ பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி நடந்துள்ளது.
வரலாறு பரீட்சை வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு விடைகள் கூறுவதாகத் தெரிவித்தே பரீட்சை மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்று கூறப்படுகின்றது.
மாணவி அன்றைய தினமே இது தொடர்பாக பாடசாலையில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்துள்ளார். மறுநாள் தனது பெற்றோருடன் சென்று ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post