கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில்
வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு சிறுவர் தினத்தையொட்டி
பளை இளைஞர் அணியினரும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தினரும்இணைந்து
மாணவர்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பளை பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு இளைஞர்
அணியானரும் கிளிநொச்சி ஊடக அமையமும்இணைந்து தமது சொந்த நிதியில் இவ்வாறு
பலன் தரும் மரங்களில் ஒன்றான தென்னம் பிள்ளை வழங்கி வைத்தனர்.
சமீப காலமாக பளை இளைஞர் அணியினர் கிளிநொச்சி ஊடக அமையத்தினருன் இணைந்து
பல்வேறு அனர்த்த நிலைகளிலும் மக்களுக்கு கை கொடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.பளையில் வசிக்கின்ற இளைஞர்களால் இவ்வாறான
சமூக சேவைகள் செய்யப்படுவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.



Discussion about this post