வட்டக்கச்சி, மாயனூரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெனகரன் என்ற 33 வயதுடையவரே உயிரிழந்தவராவார்.
கடந்த 6ஆம் திகதி நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெனகரன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து அவர் மீண்டும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரழிந்தார்.
Discussion about this post