இந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இருந்து பல்வேறு முக்கிய அப்டேட்களை WHATS APP அறிமுகப்படுத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட பயனர்கள் எதிர்பார்த்து வந்த அனைத்துவித வசதிகளையும் வாட்ஸ்அப் அளித்துவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த வாட்ஸ்அப்பின் 7 அசத்தலான அப்டேட்ஸ்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது.
ஒரே அக்கவுண்ட்டை இரண்டுக்கும் மேற்பட்ட மொபைலில் பயன்படுத்த முடியும். இதற்கு, செட்டிங்கிற்க்கு சென்று லிங் டு எக்சிஸ்டிங் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, க்யூ ஆர் கோடை முதன்மை வாட்ஸ் அப் இருக்கும் டிவைஸிலிருந்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
இதுபோல நான்கு வெவ்வேறு சாதனங்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வசதி உள்ளது. நீண்ட நாட்களாக யூசர்கள் எதிர்பார்த்து வந்த வசதியில் Chat Lock வசதியும் ஒன்று. இந்த புதிய வசதி மூலம் குறிப்பிட்ட நபருடனான தனிப்பட்ட சாட்டை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
இதற்கு நீங்கள் யாருடைய சாட்டை லாக் செய்ய விரும்புகிறீர்களோ அவரின் ப்ரோபைல் பக்கத்திற்கு சென்று ஸ்க்ரோல் டவுன் செய்து சாட் லாக் ஆப்ஷனை Enable செய்ய வேண்டும். ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை ஹோல்ட் செய்து பிறகு த்ரீ டாட் மெனுவை கிளிக் செய்து அதில் எடிட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய மெசேஜை எடிட் செய்து கொள்ள முடியும். மெசேஜ் அனுப்பி 15 நிமிடத்திற்கு மட்டும்தான் இந்த வசதி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp-ன் புதிய அப்டேட்டின் படி அப்லோட் குவாலிட்டி என்ற செட்டிங் சென்று பெஸ்ட் குவாலிட்டி என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் புகைப்படங்கள் முடிந்த அளவு அதிக குவாலிட்டியில் அனுப்ப முடியும். முன்னதாக பயனர்கள் WhatsApp வழியாக வீடியோவை ரெக்கார்ட் செய்ய வேண்டும் எனில் தேவையான அளவு வீடியோவை ரெக்கார்ட் செய்வது வரை ரெக்கார்டு பட்டனை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
தற்போது வீடியோவை ரெக்கார்ட் செய்வதற்கு என தனியாக வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நம் அனைவருக்கும் வாட்ஸ்அப் வழியாக எவ்வாறு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது என்பது தெரியும். ஆனால் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்டின் படி வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அதனை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.
இதற்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் டேபை க்ளிக் செய்து, அதில் பென்சில் ஐக்கானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது திரையில் தோன்றும் மைக்ரோஃபோனை கிளிக் செய்து வாய்ஸ்ரெக்கார்ட் செய்து ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியும். 30 நொடிகள் வரை வாய்ஸ் ரெக்கார்ட் செய்து ஸ்டேட்டஸ் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் ஒரு லிங்கை உங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நீங்கள் பதிவிடும் போது அதன் இமேஜை தற்போது மற்றவர்களால் பார்க்க முடியும். எனவே இப்பொழுது ஸ்டேட்டஸ் லிங்கை கிளிக் செய்யும் மற்றவர்கள் நீங்கள் எதைப் பற்றிய லிங்கை ஷேர் செய்து உள்ளீர்கள் என்பதை தோராயமாக அறிந்து கொள்ள முடியும்.
Discussion about this post