வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுவலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விஸ்கி போத்தல்கள் எனக் கூறி விற்பனை
மதுவரி திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத மதுபானத்தைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபரை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வரவழைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி போத்தல்கள் எனக் கூறி சுமார் மூன்று மாத காலமாக சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post