அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில
ஆகியோரை அமைச்சுப் பதவி களிலிருந்து அகற்ற வேண்டும் என ஜனாதிபதி
சட்டத்தரணி சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றில் கூறியுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு
மாற்றியமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில்
கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேராயர் மல்கம் கர்தினால் கர்தினால் மற்றும் வண.எல்லே குணவன்ச தேரர்
சார்பாக அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களையும்
அமைச்சரவையின் தலைவஅகற்ற வேண்டும். ஆனால் இதுவரையில் அது
செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post