2025 ஆம் ஆண்டு இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதே இதற்கான காரணம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (09) கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரிசி வழங்கும் வேலைத்திட்டம்
அத்துடன் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 27 இலட்சம் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள மொத்த குடும்பங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட குடும்பங்கள் இதனைப் பெற்றுக்கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post