பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை தற்போது குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்தவற்கு இதுவே சரியான தருணம் என்று இலங்கை உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகனங்களின் இறக்குமதி இலங்கை அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட பின்னர், கையிருப்பில் உள்ள வாகனங்களே சந்தையில் உள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் தற்போதைக்கு சிந்திக்க முடியாது. வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளன. ஆனால் சிறிதளவு விலை குறைப்பே ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post