வவுனியா, பசார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக நேற்று இரவு 10.20 மணியளவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் போன்ற பகுதிகளில் அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில், வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
வர்த்தக நிலையங்களில் பாதுகாப்புக் கமராப் பதிவுகளைப் பொலிஸார் ஆராய்ந்தபோது, அந்த நபரைப் பிரிதொருவர் தடியால் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post