வவுனியாவில் உள்ள 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கு தாக்கல்
குறித்த நடவடிக்கையின் போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தல், விலை அழிக்கப்பட்டிருத்தல், விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை மற்றும் உத்தரவாதம் வழங்காமை போன்றவை தொடர்பில் 54 வழக்குகளும் மற்றும் பேக்கரி தொடர்பில் ஆறு வழக்குகளுமாக மொத்தம் 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம் மற்றும் நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post