Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்

July 23, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இலக்காகி இளம் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (23.07.2023) அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்படப் பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்ப பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியநிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

அவரது கணவர், சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் வீட்டின் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடித் திரிவதை வீட்டின் உரிமையாளர் அவதானித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அங்கு வசிக்கும் சிறுமி ஒருவருக்கு பிறந்த நாள் நிகழ்வொன்றும் சிறியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

Tags: #Colombo#SwordAttack#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vavuniyajaffnasrilanka
Previous Post

பிரித்தானியர்களுக்கு விசேட அறிவிப்பு

Next Post

முன்னிலையில் கனடா, ஆஸ்திரேலியா; பின்னுக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா!

Next Post
முன்னிலையில் கனடா, ஆஸ்திரேலியா; பின்னுக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா!

முன்னிலையில் கனடா, ஆஸ்திரேலியா; பின்னுக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.