வவுனியாவில் விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டதில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் இருந்து 30 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தேக்கவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் கலாசாரத்துக்கு ஒவ்வாத செயல்கள் நடைபெறுகின்றன என்று கிடைத்த தகவல்களுக்கு அமைய பொலிஸார் திடீரென முற்றுகையிட்டுச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரும், மது ஒழிப்புப் பிரிவுப் பொலிஸாரும் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சோதனை நடவடிக்கையில் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவச் சிப்பாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிக்குரிய 30 ரவைகளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post