வவுனியா, மாமடு காட்டுப் பகுதியில் மனித உடல் எச்சங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மனித உடல் எச்சங்கள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் என்று தெரிவிக்கப்படும் மாமடுவைச் சேர்ந்த 29 வயதுடைய நபருடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவரைக் கடந்த முதலாம் திகதி முதல் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச வாசிகள் இவரைத் தேடிவந்த நிலையிலேயே மனித உடல் எச்சம் மீட்கப்பட்டுள்ளது.
உடல் எச்சங்களுக்கு அருகில் நஞ்சுப் போத்தல் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஆயினும் எவ்வாறு மரணம் சம்பவித்தது என்பது தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாமடுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post