கனடாவின் சில பாடசாலைகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதியின் சில பாடசாலைகளில் இவ்வாறு வெளிப்புற செயல்பாடுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்திலும் வட மேற்கு ஒன்றாரியோவிலும் இடம்பெற்று வரும் காட்டுத்தீ சம்பவங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் காற்றின் தரம் மோசமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சில பாடசாலைகளில் மாணவர்களை வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுப்புவதனை தவிர்க்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகள் வகுப்பறை கற்றல் நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
வளி மாசடைதல் நிலைமைகளை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாடசாலை சபைகள் தெரிவித்துள்ளன.
மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கூட பாடசாலை பணியாளர்கள் ஆகியோரின் நலனை முன்னிலைப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post