வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழாவில் 14 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட அடியவர்கள் பலர் தங்கள் தங்க நகைகளைப் பறிகொடுத்துள்ளனர்.
சுமார் 14 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகைத் திருட்டுக்கள் தொடர்பாக நேற்று மட்டும் 7 பேர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post