பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பிற்கமைய சம்பளத்தை வழங்க 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக அவர்களின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் சம்பளத்தை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுமாயின் அவர்களின் குத்தகை ஒப்பந்த காலத்தை நீடிப்பது தொடர்பிலும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் பெருந்தோட்ட யாக்கங்களின் தலைவர்களுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையின் அடிப்படையில், இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1,350 ரூபாவை வழங்குமாறும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பிலும் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தமது கோரிக்கைகளுக்கு 9 நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
அத்துடன், சில நிறுவனங்கள் ஊக்குவிப்பு கொடுப்பனவான 350 ரூபாவை விட அதிக தொகையை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் மனுஷ நாணாயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post