ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், வயது அதிகரிப்பதை மாற்றியமைக்க கூடிய ஆறு வகையான இரசாயன காக்டெய்ல்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் மனித தோலில் காணப்படும் செல்களின் வயது அதிகரிக்கும் செயல்முறை மீள திருப்பப்படும் என ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேயார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இரசாயன காக்டெய்லிளும் ஐந்து தொடக்கம் ஏழு வரையிலான தொகுதிகள் உள்ளடங்குவதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஏனைய உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேயார் உள்ளிட்ட ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் மனித செல் வயது அதிகரிப்பதை மாற்றியமைக்கவும் உயிரணுக்களை மீள உருவாக்கவும் ஒன்றிணைக்கக்கூடிய மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்வதில் மூன்று ஆண்டுகளை விட அதிக காலத்தை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கருவின் மரபணுக்களை செயல்படுத்த மரபணு சிகிச்சையை பயன்படுத்தி வயதை மாற்றியமைக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, வயதை மாற்றியமைக்கும் முதல் மரபணு சிகிச்சையின் வைத்திய பரிசோதனைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் வருடத்தில் சிகிச்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டேவிட் சின்க்ளேயார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post