நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனைக் கவனித்துக் கொண்டிருந்த வயதான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
கொலை மிரட்டலின் கீழ் பாலியல் பலாத்காரம்
திருமணமாகாத பாதிக்கப்பட்ட பெண் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொலை மிரட்டலின் கீழ் சந்தேக நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொலிஸாரிடம் கூறினார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post