“வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரும் இன்னும் இரு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களிடம் உறுதியளித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், மொட்டு கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க பொலிஸ்மா தவறிவிட்டார் என அவருக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ்மா அதிபர், கூட்டம் நடைபெற்ற ஜனாதிபதி மாளிகைக்கு அவசரமாக அழைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா விளக்கமளித்துள்ளார்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரையும் இரு வாரங்களுக்குள் கைது செய்யமுடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.
Discussion about this post