யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் மீள்குடியேற்றத்திற்காக 1502 குடும்பங்கள் இருப்பதாகவும் 212 குடும்பங்களுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு குறிப்பிட்டார்.
Discussion about this post