வடமாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் உள்ள 41 வைத்தியர்கள், மருத்துவர்களாக இருப்பதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்களில் சிலர் மருத்துவ சபையில் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் பட்டதாரி பெண்ணொருவரின் மரணம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் அவ்விரு வைத்தியசாலைகளின் வைத்தியர்களின் தகைமைகளை பரிசோதித்த போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன
சுகாதாரப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்ட தகவல்
அதன்படி வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களில் 41 பேர் மூன்றாம் நிலை சேவையில் தகுதி பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த 41 மருத்துவர்களில் சிலர் அரசு மருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்யப்படவில்லை. இதேவேளை, அவர்கள் தோற்றவிருந்த மொழிப் பரீட்சை மற்றும் ஏனைய உயர்தரப் பரீட்சைகளுக்கு மேலும் ஒரு குழு வைத்தியர்கள் ஆஜராகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மன்னார் மற்றும் வவுனியாவில் இரு மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சுகாதாரப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்ட இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து மருத்துவர்கள் தகமைகள் தொடர்பில் வடக்கில் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களின் தகுதிகள் மற்றும் பிற விவரங்களைக் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளtஹாகவும் தெரியவருகின்றது.
Discussion about this post