வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்த வருடத்திக்குரிய முத்திரைத் தீர்வை மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தால் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதுவரை மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் அந்தந்த உள்ளூராட்சி சபைகளுக்கான முத்திரை தீர்வை மாதாமாதம் வழங்கப்பட்டது. தற்போது கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அந்தந்த சபைகளால் மாதாந்தம் கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றபோதும், கொடுப்பனவுகள் வழற்கப்படவில்லை. உள்ளூராட்சி சபைகள் உத்தேச வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது முத்திரைத் தீர்வை மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கும் தொகை அபிவிருத்தி வேலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுகின்றது.
வருடம் முடிவடையும் நிலையில் இதுவரை முத்திரைத் தீர்வைக்குரிய நிதி வழங்கப்படாததால் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post