எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமானது முதல் மிகக் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாளை பிற்பகலுக்குப் பின்னர் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது உறுதியாகியுள்ளதால், இந்தத் தாழ்வு நிலை, இலங்கையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளூடாக மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலை சென்றடையும் அல்லது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளூடாக வடக்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் அரபிக் கடலை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இரு பகுதிகளுக்கூடாகவும் நகர்வதற்கான வாய்ப்புக்கள் சம அளவில் இருப்பதால், நகர்வுப் பாதை தொடர்பாக அடுத்துவரும் நாள்களிலே உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தாழமுக்கம் எந்தத் திசையால் நகர்ந்தாலும் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post