இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும்
ஒன்றிணைக்க இயலாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்
எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனகூறியுள்ளார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைசகாரணாம்காட்டி தமிழ்க்
கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பமுடிவெடுத்துள்ளமை
குறித்து கருத்தளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் நிலமோ அல்லது முஸ்லிம்களின் நிலமோ இல்லை என
கூறிய அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே காணபடுகின்றன எனவும் கூறினார்.
எனவே, மாகாணங்களைப் பிரித்து எவரும் சொந்தம் கூற
இயலாது என்றும் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்றும் அமைச்சர்
தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று ஒன்றாக இருந்ததானாலேயே இனக்கலவரம்
வெடிக்கதொடங்க்கியது என்றும் வன்முறைகள் ஆரம்பித்தன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க்
கட்சிகள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன
கூறினார்.
Discussion about this post