முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருந்தபோதிலும் அலுவலகங்கள் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதை அவதானிக்க முடிகின்றது.
2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகிறது.
அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள், வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 வீத மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருகை சில பாடசாலைகளில் குறைவடைந்துள்ள போதிலும், தீபக வலயம் உட்பட சகல பாடசாலைகளிலும் 98 வீதமான மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post