வடக்கு மாகாணத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் தாழ் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டதுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை வரையில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வன்னிப் பெருநிலப்பரப்பில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழையுடனான காலநிலை தொடர்ந்தால் பெரும் பயிரழிவு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post