வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து சலுகை விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய வசதிகள் இல்லாமை உட்பட அதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரித செயன்முறைகுறிப்பாக, இது குறித்து போக்குவரத்து அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கென விசேட நிதியும் கிடைக்கப்பெறவுள்ளதுடன் அதனூடாக வடக்கிலுள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும் களஞ்சிய வசதிகளை நவீனமயப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், உரிய முறையில் பழங்களை கொழும்புக்கு கொண்டுவருவதற்கென துரித செயன்முறை தயாரிக்கப்படுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post