வடகொரிய அதிபர் மீது (Kim Jong Un) கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பினையும் மீறி அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், பியாங்யாங் நகரில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், இது கிம்மை கொலைசெய்யும் முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கிம்முக்கான பாதிப்பு பலப்பட்டுள்ளதாகவும் இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வடகொரியா தலைநகரில் அதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை என தெரிவித்துள்ள தென்கொரிய உளவு அமைப்புகள், இது குறித்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளன.
Discussion about this post