வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு பிறந்தநாள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தந்தையுமான கிம் ஜாங் இல் மறைந்தார்.
அவரது 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு
அறிவித்தது.
அத்துடன் பாடல் பாடுவது, மது அருந்துவது அல்லது கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம், பூப்பெய்தல், இறுதிச் சடங்குகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என்றும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
துக்க காலம் 17ஆம் திகதி தொடங்கி 20ஆம் திகதியுடன் முடிவடைவதாக கூறப்பட்டது. இதற்கிடையில், துக்கம் அனுசரிக்கப்படும் ஒரு வார காலத்தில் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதையோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் வழங்குவதையோ தவிர்க்குமாறும், இரகசிய முகவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும்
மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களை கடுமையாக கண்காணிக்க சில பிரிவுகளுக்கு அரசு உத்தரவிட்டது. முன்னாள் தலைவர் கிம்
ஜாங் இல்லின் சாதனைகள் மற்றும் மக்கள் மீதான அவரது அன்பு பற்றிய ஆவணப்படங்கள் ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post