பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
6 மாதத்துக்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கி, ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற் திட்டத்தின் மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பது போன்ற பரிந்துரைகள் மத்திய வங்கியால் ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post