கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் (21) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் சற்று தளம்பல் நிலை காணப்படுகிறது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 314.83 ரூபாய் முதல் 315.31 ரூபாய் மற்றும் 330. 31 ரூபாய் முதல் 330.82ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.75 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாயாக மாறாமலிருக்க விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் முதல் 328 ரூபாயாக குறைவடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post