மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
மூத்த பிரஜைகளின் சேமிப்பிற்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து கடனாக செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்கள்
இந்த விடயத்தில் ஜனாதிபதி மிகவும் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வயதினருக்கான வட்டி விகிதங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பணப்புழக்கத்தை கவனித்து, அதற்கேற்ப தெளிவான அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Discussion about this post