லெபனாவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என உறுதியளிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறுவதனை இறுதி நேரம் வரையில் காலம் தாழ்த்த வேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பிராந்திய வலயத்தில் பெரும் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இஸ்ரேலிய படையினர் லெபானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் இறுதி நேரம் வரையில் காத்திருந்து நாடு திரும்ப எத்தனிப்பது ஆபத்தாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லெபானனிலிருந்து வர்த்தக விமானங்களின் ஊடாக வெளியேற இன்னமும் சந்தர்ப்பம் உண்டு என வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
Discussion about this post