லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
மேலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post