லிட்ரோ எரிவாயு விநியோக நிறுவனம் மீண்டும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகத்தை சந்தைக்கு மேற்கொள்ளவில்லை. இன்று முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆயினும், இன்னும் சில தினங்களுக்கு எரிவாயு சிலிண்டர்வ விநியோகம் நடைபெறாது என்று தற்போது லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் எரிவாயு சிலிண்டருக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எரிவாயு நிறுவனங்கள் குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களையே சந்தைக்கு விநியோகிப்பதால் மக்கள் அவற்றைப் பெறமுடியாததால்,
எரிவாயு சிலிண்டருக்காக நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது.
Discussion about this post