லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதும் அவை நேற்று விநியோகிக்கப்படவில்லை. எரிவாயு சிலிண்டருக்காகக் காத்திருந்த மக்கள் அதனால் ஏமாற்றமடைந்தனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட, எரிவாயு சிலிண்டர்கள் நேற்றுப் பகல் வரை வந்து சேரவில்லை என்று அறிய முடிகின்றது.
அதையடுத்து இன்று காலை லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் எரிவாயு சிலிண்டர்களை கணக்கெடுத்த பின்னரே அவற்றை விநியோகிக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post