இந்தியாவில் திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பைபிள் ஒன்று, லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பைபிள் தஞ்சை, சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2005) காணாமல் போயிருந்தது.
கிறிஸ்தவ ஆகம நூலான பைபிள் ஆங்கில மொழியிலேயே ஆரம்பத்தில் இருந்தது.
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக டென்மார்க் மன்னரின் வேண்டுகோளின்படி 1709 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த கிறிஸ்தவ மதபோதகர் பார்தோலோமாஸ் செய்ங்பால்க், தமிழ் கற்று 1714ஆம் ஆண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
நாகபட்டினம், தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட அந்த பைபிள், அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்குப் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த பழமை வாய்ந்த பைபிள் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2005ஆம் ஆண்டு மாயமானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தற்போது அந்த பைபிளை லண்டனில் கண்டுபிடித்துள்ளனர்.
பைபிளைத் திருடியவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Discussion about this post