குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உட்பட மூன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் ரோஹண தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்தில் இருந்து எம்.டி.ஆர்.எஸ் தமிந்த கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சேவைத் தேவையின் அடிப்படையில், பொதுச் சேவை ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Discussion about this post