அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்குதலால் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் இணையதளம் குறிப்பிட்டது.
அலுமினிய கார் உதிரிபாகங்களை நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ, பொறியாளரைத் தாக்குவதைக் கண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் பயந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரோபோவின் அருகில் நின்று மற்ற இரண்டு ரோபோக்களுக்கான மென்பொருளை உள்ளிடும்போது, பொறியாளர் ரோபோவின் இடுக்கிகளால் பிடிக்கப்பட்டு அடிக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் பொறியாளரின் கையில் காயம் ஏற்பட்டது, ஆனால் எலோன் மஸ்க் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post