கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடற்றவர்களுக்கு பெரும் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடற்ற பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 110 வீடற்றவர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 81 பேர் ஆண்கள் எனவும் 29 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ தங்குமிடத்தில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரி வயது 51 எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டில் 132 வீடற்றவர்கள் றொரன்டோவில் உயிரிழந்துள்ளனர்.
ரொறன்ரோவில் வீடற்ற நிலையானது மரண தண்டனைக்கு நிகரானது என்ற பொருளை உணர்த்தும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக வீடற்றவர்கள் நல ஆர்வலரான ஜோன்சன் ஹாட்லெம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் ரொறன்ரோவில் தங்குமிட வசதிகளில் தங்கிய மற்றும் வீடற்றவர்கள் 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது
Discussion about this post