ரொறன்ரோவில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருட்கள் மெக்ஸிக்கோவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
[கிறிஸ்டல்மெதபட்டமைன், கொக்கேய்ன், பென்டானில் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த வகைப் போதைப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 32 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து நான்கு கைத்துப்பாக்கிகளும், ஏழு மோட்டார் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்த 50,000 டொலர் பணமும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மிகவும் நுட்பமான முறையில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட போதைப் பொருள் கும்பல்களுக்கு தொடர்பு உண்டு என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post