ரொறன்ரோவில் எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் சளிக் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முடிந்தளவு விரைவாக சளிக்காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ரொறன்ரோ பிரஜைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை எண்ணிக்கை 10.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகை உள்ளிட்ட விடுமுறை காலத்தில் பொதுவாக சளிக்காய்ச்சல் பரவுகை உச்சம் தொடும் என நகரின் முன்னணி மருத்துவர் டொக்டர் எய்லீன் டி வில்லா தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு வைத்தியசாலைகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post