ரொறன்ரோவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது
கடந்த ஜூலை மாதம் 31-ம் திகதி வரையில் 93 பேர் குரங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 21 ஆக காணப்பட்டது.கடந்த ஜூலை மாத இறுதி இரண்டு வாரங்களில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை 13 ஆக பதிவாகியுள்ளது.நகரம் முழுவதிலும் நோயாளர்கள் பதிவாகிய போதிலும் டவுன் டவுன் கோர் பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.குரங்கம்மை புதிய திரிபு எவ்வளவு ஆபத்தானது என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post