நாட்டின் நிலைமை எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக உள்ளது. தற்போது நாட்டில் ரூபாவோ, டொலரோ கையிருப்பில் இல்லையென்று மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகரவுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கலந்துரையாடலின் பின்னர் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில், நேற்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, “எதிர்பார்த்தை விடவும் மிக மோசமான நிலைமையில் நாடு உள்ளது. இப்போது நாட்டில் ரூபாவோ, டொலரோ இல்லை.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவது எவராலும் தாங்க முடியாத பெரும் சவாலாக அமையும்” என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post