இந்தியாவின் (India) – ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் தர மாணவன் சக மாணவனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மத கலவரம் ஏற்பட்டுள்ளது.பாடசாலை உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது படுகாயமடைந்த 15 வயது இந்து மதத்தைச் சாரந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தடையுத்தரவு தாக்குதலை மேற்கொண்ட மாணவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மாணவனின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதால் வீடு இடிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து கலவரம் மேலும் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தநிலையில் உதய்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கலவரத்தைக் கட்டுப்படுத்த அதிகளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post