திருகோணமலை, மூதூரிலுள்ள 64ஆம் கட்டை ராஜவந்தான் மலைக்குச் சென்ற தமிழர்களை தடுத்து பிக்கு மற்றும் இராணுவத்தினர் இணைந்து அச்சுறுத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழ் மக்களின் தொல்பொருள் சின்னங்கள் உள்ள பகுதிக்கு இன்று காலை வழிபாடுகளுக்குச் சென்ற மக்களும், பூசகர்களுமே அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து அவர்களை அங்கு செல்வதற்குத் தடை ஏற்படுத்தினார் என்றும், மிகவும் கீழ்த்தரமாகப் பேசியதுடன், கைபேசிகளைப் பறித்து எறிந்து அடாவடியில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நின்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
ராஜவந்தான் மலையின் கீழ் சயாகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு தமிழ் மக்கள் வழிபாட்டுக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அங்கிருந்த தமிழ் மக்களின் வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, பௌத்த சின்னங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரியவருகின்றது.
Discussion about this post