ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது சகோதரனான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே பெரும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது.
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான வன்முறைகளைகளை அடுத்து 10ஆம் திகதி பதவி விலகிய மஹிந்த ராஜபக்ச தற்போதுவரை தலைமறைவாகவே இருக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புத்திசாலித்தனமற்ற தீர்மானங்களாலேயே ராஜபக்ச குடும்பம் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று மஹிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதாரரான பஸில் ராஜபக்ச கருதுகின்றார் என்று அறியமுடிகின்றது.
கோட்டாபய ராஜபக்ச தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்சவை பலிகடா ஆக்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டும், பொதுஜன பெரமுனவில் உள்ள மஹிந்த மற்றும் பஸில் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாள்களில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பகிரத் திட்டமிட்டுள்ளனர்.
அதேநேரம், மஹிந்த ராஜபக்சவுக்கும், கோட்டாய ராஜபக்சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக் கசப்பை நீக்க சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை. குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையால் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post