ராஜபக்சாக்கள் (rajapaksasஇருக்கும் இடத்தில், அவர்களின் நிழல் விழும் இடத்தில் கூட தான் ஒருபோதும் இருக்க மாட்டார்,என்றும், ஜனாதிபதித் தேர்தலுடன் தான் தனது எதிர்காலத் திட்டங்கள் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால் ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் மற்றும் அனைவரும் இந்த தேர்தல் நிச்சயமாக நடக்கும் என்று அறிவித்துள்ளனர். இதைப் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
அரசியலமைப்பில் ஐந்தாண்டுகள் என்று ஒரு இடம் உள்ளது. இன்னொரு இடத்தில் ஆறு ஆண்டுகள் என்கிறார்கள். இது திருத்தப்படவேண்டும். இதனால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
முதலில் வரப்போவது ஜனாதிபதித் தேர்தல்
எனவே, என்னை ஆதரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.எனக்கு ஒருவரும் நெருக்கடியை கொடுக்கவில்லை இந்த நேரத்தில் முதலில் வரப்போவது ஜனாதிபதித் தேர்தல்தான். எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னெடுப்பதில் யாருக்கும் இலாபம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வர வேண்டும் என்று ஓரிருவர் சொல்கிறார்கள். ஆனால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படவேண்டும் என நான் கருதுகிறேன்.
ரணிலுக்கு மொட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதம்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அமைச்சர்களின் ஆசியுடன் மொட்டுவிற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த தேர்தலில் அவரது கட்சி பின்னடைவை சந்தித்ததால் மொட்டுவின் ஆசியுடன் தான் வந்திருக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான வெற்றியை தொடர வேண்டுமாயின் மொட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதம் செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமையும்.
ஆனால், ராஜபக்சாக்கள் இருக்கும் இடத்தில், அவர்களின் நிழல் விழும் இடத்தில் கூட நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்.எனவே எனது இந்தக் கொள்கை வாக்களிப்புக்கு மட்டுமல்ல, மற்ற அனைத்து விவகாரங்களுக்கும், அரசியல் விவகாரங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post