ராஜபக்சக்களுக்கு ஒரு உயிரின் விலை ஒரு லட்சம் ரூபா என்று தெரிவித்துள்ளார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் என்று வெளியாகியுள்ள அறிவிப்புத்தொடர்பில் அவர் தனது டுவீற்றரில் பதிவிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்பீட்டை எதிர்பார்க்கவில்லை என்றும், நீதியையும், உண்மையையும்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இரக்கமற்றது என்றும், கொடூரமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமானப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post